Saturday, May 2, 2020

மாஸ்டர் படத்திற்காக பெரும் விலை கொடுக்க முன்வந்தும் நிராகரித்த விஜய்


vijay-comment-about-master-digital-release-amazonprime-by-hariharang-digitalhari-blogger-madurai

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் மாஸ்டர் ஏப்ரல் 9-ம் தேதி வெளியாகியிருக்க வேண்டிய படம் கரோனா ஊரடங்கால் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. தற்போது படத்தின் பணிகள் அனைத்தையும் முடித்து வெளியீட்டுக்குத் தயாராக வைத்துள்ளது படக்குழு.

இன்னும் 20 நாட்கள் இறுதிக்கட்டப் பணிகள் இருப்பதாகவும்,மாஸ்டர் எப்போது வெளியானாலும் கொண்டாட்டம்தான் என்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். இதனிடையே, இந்த லாக் டவுனைப் பயன்படுத்தி வெளியீட்டுக்குத் தயாராகவுள்ள படங்களை டிஜிட்டல் நிறுவனங்கள் கைப்பற்றி வருகின்றன.

Is master movie release on amazon prime? hariharang-digitalhari-blogger-madurai


மாஸ்டர் படக்குழுவினரிடம் டிஜிட்டல் நிறுவனம் நடத்திய பேச்சுவார்த்தை குறித்த தகவல் வெளியாகியுள்ளது. என்னவென்றால்,மாஸ்டர் படத்தைக் கைப்பற்ற டிஜிட்டல் நிறுவனம் மிகப்பெரும் தொகையைக் கொடுக்க முன்வந்துள்ளார்கள். இந்த தொகையைக் கேட்டுவிட்டு, உடனடியாக விஜய்யிடம் கேட்டுச் சொல்கிறேன் என்று தயாரிப்பாளர் சொல்லியிருக்கிறார்.

தயாரிப்பாளர் விஜய்யிடம் கேட்டதற்கு,இதை விடப் பெரிய தொகை கொடுத்தாலும் வேண்டாம். நான் படம் பண்ணுவது என் ரசிகர்களுக்காகத் தான். அவர்கள் திரையரங்கில் கொண்டாடுவதற்காகத் தான் என்று சொல்லியிருக்கிறார் விஜய். இந்த விஷயத்தை அப்படியே அமேசான் நிறுவனத்திடம் சொல்லியிருக்கிறார் தயாரிப்பாளர்.

இதனைத் தொடர்ந்தே மாஸ்டர் படத்தின் டிஜிட்டல் வெளியீடு தொடர்பான பேச்சுவார்த்தைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

Saturday, April 18, 2020

மதுரை சித்திரை திருவிழா ரத்து: இணையத்தில் திருக்கல்யாண நிகழ்வு ஒளிபரப்பு!

மதுரை சித்திரை திருவிழா ரத்து செய்யப்படுவதாகவும், திருக்கல்யாண நிகழ்வு இணையத்தின் மூலம் ஒளிபரப்பு செய்யப்படும் எனவும் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் இணை ஆணையர் அறிவித்துள்ளார்


மதுரை: உலகப்புகழ் பெற்ற மதுரை சித்திரை திருவிழா கொரோனா வைரஸ் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக கோயில் இணை ஆணையர் அறிவித்துள்ளார்.

மதுரை என்றாலே நமது நினைவுக்கு வரும் பல விஷயங்களில் முதன்மையானது
மீனாட்சி அம்மன் கோயில். மதுரைக்காரர்கள் மட்டுமல்லாமல் தமிழகத்தையே திரும்பி பார்க்க வைக்கும் ஆடல், பாடலுடன் களைகட்டும் சித்திரை திருவிழா, மீனாட்சி அம்மன் திருக்கல்யாண தேரோட்டம் போன்றவை உலக புகழ் பெற்றவை.

இதனிடையே, கொரோனா சமூக பரவலை கட்டுக்குள் கொண்டு வரும் பொருட்டு ஊரடங்கு உத்தரவை வருகிற மே மாதம் 3ஆம் தேதி வரை பிரதமர் மோடி நீட்டித்துள்ளார். இந்த காலகட்டத்தில் அத்தியாவசிய தேவைகளுக்கான சேவைகள் மட்டுமே இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, தமிழக கோயில்களில் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் வகையில், பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், தமிழகத்தின் முக்கிய நிகழ்வான மதுரை சித்திரை திருவிழா நடைபெறுமா என்ற கேள்வி பொதுமக்களிடையே பரவலாக எழுந்தது.


இந்நிலையில், மதுரை சித்திரை திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளதாக மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் இணை ஆணையர் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ஏப்ரல் 25ஆம் தேதி தொடங்க வேண்டிய கொடியேற்றம், தினமும் நடைபெறும் வைபவங்கள், சுவாமி திருவீதி உலாக்கள், பட்டபிஷேகம், திக்குவிஜயம், திருக்கல்யாண உற்சவம், திருத்தேரோட்ட நிகழ்ச்சிகள் நடைபெறாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

madurai-chithirai-thiruvizha-festival-2020-canceled-official0-notice-hariharang-madurai-blogger-digitalhari

எனினும் திருக்கல்யாணத்தை முன்னிட்டு மீனாட்சிக்கு, சுந்தேரஸ்வரர் திருமாங்கல்யம் அணிவிக்கும் திருக்கல்யாண விழாவை சாஸ்திர சம்பிரதாயபடி எளிமையாக நடத்த அறநிலையத்துறையிடம் கோயில் நிர்வாகம் அனுமதி கோரியுள்ளது.முதன்முறையாக இப்பெரும் விழாக்கள் கொரோனா தொற்றால் ரத்தானது பக்தர்கள் இடையே கவலையை ஏற்படுத்தி உள்ளது.


கோவில் நிர்வாகம் அறிவிப்பு 


இது குறித்து கோவில் நிர்வாகம் கூறி இருப்பதாவது: மதுரையில் வரும் 25-ம் தேதி சித்திரை திருவிழா துவங்குகிறது. மே மாதம் 4ம் தேதி திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறுகிறது. ஊரடங்கு உத்தரவை அடுத்து கோவில் சம்பிரதாயப்படி 4 சிவாச்சாரியார்கள் மட்டுமே உரிய பாதுகாப்பு முறைகளை பின்பற்றி திருக்கல்யாண வைபவத்தை நடத்துவர் . திருமண நிகழ்ச்சி www.maduraimeenakshi.org என்ற இணையதளத்தில் ஒளிபரப்பப்படுகிறது. திருமணமான பெண்கள் மே 4ம் தேதி காலை 9.05 மணியில் இருந்து 9.29 மணிக்கும் புதிய மங்கல நாணை வீ்ட்டில் இருந்த படியே மாற்றிக்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.





Thursday, April 9, 2020

அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு: ஊரடங்கு நீட்டிப்பு !!


anna -university-exams-postponed-april14-2020-hariharang-blogger-madurai

ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறவிருந்த பருவத் தேர்வுகள் (செமஸ்டர்) ஒத்திவைக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. ஏப்ரல் 14 ஆம் தேதிக்கு பிறகு ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படும் என்பதை உறுதிசெய்யவதாக இந்த அறிவிப்பு உள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.இதன் காரணமாக, பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ஒததிவைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், ஏப்ரல் மூன்றாவது வாரத்தில் தொடங்கப்பட இருந்த அண்ணா பல்கலைக்கழக பருவத் தோ்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக பல்கலைக்கழக நிர்வாகம் இன்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

கொரோனா: நோயின் நிலையை அனுசரித்தே ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முடிவு - முதல்வர்

அதாவது, ஏப்ரல் 17 ஆம் தேதி தொடங்கப்பட இருந்த பல்கலைக்கழக இணைப்பு பொறியியல் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான ஏப்ரல்-மே பருவத் தோ்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

மேலும் மாற்றியமைப்படும் தேர்வு கால அட்டவணை பின்னர் அறிவிக்கப்படும் எனவும் பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கொரோனா தடுப்பு: அரசுடன் கைகோர்த்த அண்ணா பல்கலைக் கழகம்!

நாடு முழுவதும் ஏப்ரல் 14 ஆம் தேதிக்கு பிறகு ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகிவரும் நிலையில், செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


anna -university-exams-postponed-april14-2020-hariharang-blogger-madurai








Wednesday, April 8, 2020

கல்வி நிறுவனங்களை மே 15 வரை திறக்க வேண்டாம்: மத்திய அமைச்சரவைக் குழு பரிந்துரை!

     
college-students-hariharang-blogger-madurai


     கொரோனா பரவலைத் தடுக்க கல்வி நிறுவனங்களை திறக்க விதிக்கப்பட்ட தடையை மே 15-ஆம் தேதி வரை நீட்டிக்க மத்திய அமைச்சரவை குழு பரிந்துரைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


     உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா ஆட்கொல்லி வைரஸ் இந்தியாவில் தீவிரமாக பரவத் தொடங்கியுள்ளது. கொரோனா பரவலை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள போதும் மகாராஷ்டிரா, தமிழகம், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் நாள்தோறும் ஏராளமானோர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர்.

     இந்நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பான பிரச்னைகளை கவனித்து வரும் மத்திய அமைச்சரவை குழு கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அமித் ஷா, பியூஷ் கோயல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


     அப்போது, கொரோனா தொற்றை தடுக்கும் நடவடிக்கையின் ஒருபகுதியாக பள்ளி, கல்லூரிகளுக்கான விடுமுறையை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீட்டிக்கலாம் என்று முடிவெடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

     இதேபோன்று, வழிபாட்டு தலங்கள் மற்றும் மால்களை திறப்பற்கான கட்டுப்பாட்டை ஒரு மாதத்திற்கு நீட்டிக்கவும் ஆலோசித்ததாக கூறப்படுகிறது. மே மாதத்தில் கல்வி நிறுவனங்களுக்கு கோடை விடுமுறை தொடங்குவதால் ஜூன் மாத இறுதியில் திறந்து கொள்ளலாம் என்றும் மத்திய அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.


Coronavirus Tracker - Infogram

Tuesday, April 7, 2020

ஊரடங்கு எப்போது, எப்படி தளர்த்தப்படும்; மத்திய அரசின் செயல்திட்டம் இதுதான்?

       
coronavirus_tamilnadu_lockdown_hariharang_blogger_madurai


       இந்தியாவில் கொரோனா வைரஸ் தொடர்ச்சியான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இது மேலும் பரவாமல் தடுக்கும் வகையில் நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு அமலில் இருக்கிறது. இந்த காலக்கட்டத்தில் மக்கள் வீட்டை விட்டு வெளியே வரக் கூடாது. அத்தியாவசிய தேவைகளுக்கு முகக் கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகளுடன் வெளியே வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.


       இருப்பினும் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்தபாடில்லை. இந்நிலையில் ஊரடங்கு முடிவடைந்த பிறகு, அனைத்து மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் ஊரடங்கு முழுவதுமாக தளர்த்தப்படுமா அல்லது குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் தளர்த்தப்படுமா என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

       இதுதொடர்பாக நிதி ஆயோக் குழுவினர் ’அவசரகால மருத்துவ மேலாண்மை திட்டம்’ ஒன்றை மத்திய அரசிடம் சமர்பித்துள்ளனர். அதில், கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்கள், மாவட்டங்களில் தொடர்ந்து 28 நாட்கள் ஊரடங்கு அமலில் இருக்க வேண்டும்.

       மற்ற பகுதிகளில் படிப்படியாக ஊரடங்கு தளர்த்தலாம் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. இதற்காக நான்கு விதமான படிநிலைகள் வரையறுக்கப்பட்டு உள்ளன. அதன்படி,


government-lockdown-plan-india-tamilnadu-hariharang-blogger-madurai


       நிலை ஒன்று - கடைசி 7 நாட்களில் 5 பேருக்கு குறைவான எண்ணிக்கையில் கொரோனா பாதிப்பும், புதிதாக யாருக்கும் வைரஸ் தொற்று ஏற்படாமலும் இருக்க வேண்டும்


      நிலை இரண்டு - கடைசி 7 நாட்களில் 20 பேருக்கு குறைவான எண்ணிக்கையில் வைரஸ் பாதிப்பும், புதிதாக யாருக்கும் கொரோனா தொற்று ஏற்படாமலும் இருக்க வேண்டும்.

      நிலை மூன்று - 20 அல்லது அதைவிட அதிகமாக அதேசமயம் 50க்கும் குறைவாக கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நபர்கள் இருக்க வேண்டும்.

      நிலை நான்கு - 50 அல்லது அதற்கு மேற்பட்ட எண்ணிக்கையில் கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்க வேண்டும்.


     மேற்கூறியபடி இருந்தால் நிலை ஒன்றிற்கு முதலில் ஊரடங்கு தளர்த்தப்படும். அதன்பிறகு படிப்படியாக பிற நிலைகளுக்கும் ஊரடங்கு தளர்த்தப்படும். ஆனால் இதுதொடர்பாக மத்திய அரசு எந்தவொரு முடிவும் எடுக்கவில்லை.


    இன்னும் ஒருவார காலம் இருப்பதால் பல்வேறு காரணிகளை கருத்தில் கொண்டு சரியான நேரத்தில் ஊரடங்கு குறித்து முடிவெடுக்கப்படும் என்று மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நேற்றைய தினம் மத்திய அமைச்சரவை, சுகாதாரத்துறை அமைச்சகம், பயோடெக்னாலஜி துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சகம், தேசிய பேரிடர் மேலாண்மை அமைப்பு, பிரதமர் அலுவலகம் ஆகியவற்றுடன் நிதி ஆயோக் சி.இ.ஓ அமிதாப் கந்த் ஆலோசனை நடத்தினார். இதில் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மீள்வது தொடர்பான செயல் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.


     

Monday, April 6, 2020

இன்னும் 28 நாட்கள் ஊரடங்கு நீட்டிப்பு வதந்தி: மத்திய அரசு விளக்கம்




28 days lockdown in india malai malar today


இன்னும் 28 நாட்கள் ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்று வதந்தி பரவிய நிலையில் மத்திய அரசு இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளது.

இந்தியாவில் கரோனா தொற்றின் தீவிரம் அதிகமாகி வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த 21 நாட்கள் ஊரடங்கு அமலில் இருக்கிறது. பொதுமக்கள் அனைவருமே அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டுமே வெளியே வருகிறார்கள்.

இதனிடையே தற்போது வெளியே என்ன நடக்கிறது என்பதைத் தொலைக்காட்சி செய்திகளிலும், சமூக வலைதளங்கள் மூலமும் தெரிந்து கொள்கிறார்கள். தற்போது கரோனா வைரஸ் அச்சுறுத்தல் தொடர்பாகவும், ஊரடங்கு தொடர்பாகவும் பல்வேறு போலி செய்திகள், வதந்திகள், ஆடியோ பேச்சுகள், வீடியோக்கள் என இணையத்தை ஆட்கொண்டு வருகின்றன. இதனையும் பலரும் உண்மை என்று நம்பி ஷேர் செய்து வருகிறார்கள்.

உலக சுகாதார மையம் ஊரடங்கு குறித்து தெரிவித்த தகவல் குறித்த புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலானது. இதனை உண்மை என்று நம்பி பலரும் இன்னும் 28 நாட்கள் ஊரடங்கு நீட்டிக்கப்பட வாய்ப்பு உள்ளது என்று தகவலைப் பரப்பினார்கள்.

இதற்கு மத்திய அரசு தங்களது ட்விட்டர் தளத்தில் மறுப்பு தெரிவித்துள்ளது. உலக சுகாதார மையம் தெரிவித்ததாக வெளியான புகைப்படத்தைப் பகிர்ந்து மத்திய அரசின் அதிகாரபூர்வ ட்விட்டர் தளத்தில் கூறியிருப்பதாவது:

”ஊரடங்கு பற்றி உலக சுகாதார மையம் எந்தத் தகவலும் தெரிவிக்கவில்லை. இணையத்தில் ஒரு புரளி சுற்றி வருகிறது. போலிச் செய்திகளை நம்பாதீர்கள். உண்மையைத் தெரிந்து கொள்ளுங்கள், பாதுகாப்புடன் இருங்கள்”.

இவ்வாறு மத்திய அரசு தெரிவித்துள்ளது.


இன்னும் 28 நாட்கள் ஊரடங்கு நீட்டிப்பு வதந்தி: மத்திய அரசு விளக்கம்

Saturday, April 4, 2020

கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளானவர்களுக்கு சிகிச்சையளிக்க தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ள தனியார் மருத்துவமனைகளின் பட்டியல் (மாவட்டம் வாரியாக)

 


      கொரோனா பாதிப்பு எண்ணிக்கை இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா 500ஐ கடந்துவிட்ட நிலையில் தமிழ்நாட்டில் 411 பேர் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதியாகியுள்ளது. டெல்லி மாநாட்டில் கலந்துகொண்டவர்களால் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை தமிழ்நாட்டில் அதிகரித்துவருகிறது.

    கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. சுகாதாரத்துறை சார்பில் கொரோனாவிற்கு சிறந்த சிகிச்சையளிக்க அனைத்துவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற விரும்புபவர்கள் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுக்கொள்ளவும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதை சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷும் உறுதிப்படுத்தியிருந்தார்.



    இந்நிலையில், கொரோனாவிற்கு சிகிச்சையளிக்க தமிழ்நாடு அரசு அனுமதியளித்துள்ள தனியார் மருத்துவ கல்லூரிகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளின் பட்டியலை பார்ப்போம்

    முதலில் கொரோனாவிற்கு சிகிச்சையளிக்க அனுமதிக்கப்பட்டுள்ள தனியார் மருத்துவமனைகளின் பட்டியலையும் அதன்பின்னர் தனியார் மருத்துவ கல்லூரிகளின்   பட்டியலையும் பார்ப்போம். 

    மாவட்ட வாரியாக தனியார் மருத்துவமனைகளின் லிஸ்ட்:



மாவட்ட வாரியாக தனியார் மருத்துவ கல்லூரிகளின் லிஸ்ட்:

கோவை:

1. கற்பகம் ஃபேகல்டி ஆஃப் மெடிக்கல் சயின்ஸ்சேண்ட் ரிசேர்ச் - ஒத்தகல்மண்டபம்.

2. கேஎம்சிஎச் இன்ஸ்டிடியூட் ஆஃப் மெடிக்கல் சயின்ஸ் அண்ட் ரிசர்ச் - அவினாசி ரோடு.

3. பிஎஸ்ஜி இன்ஸ்டிடியூட் ஆஃப் மெடிக்கல் சயின்ஸ்&ரிசர்ச் - பீலமேடு.

காஞ்சிபுரம் & செங்கல்பட்டு:

4. பாரத் மெடிக்கல் காலேஜ் & ஹாஸ்பிடல் - சேலையூர்

5. செட்டிநாடு ஹாஸ்பிடல் & ரிசர்ச் இன்ஸ்டிடியூட் - கேளம்பாக்கம்

6. கற்பக விநாயகா இன்ஸ்டிடியூட் ஆஃப் மெடிக்கல் சயின்ஸ் & ரிசர்ச் - மதுராந்தகம்

7. மாதா மெடிக்கல் காலேஜ் & ரிசர்ச் இன்ஸ்டிடியூட் - கோவூர்

8. மீனாட்சி மெடிக்கல் காலேஜ் ஹாஸ்பிடல் & ரிசர்ச் இன்ஸ்டிடியூட் - Enathur

9. மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மெடிக்கல் காலேஜ் & ஹாஸ்பிடல் - மேல்மருத்துவத்தூர்

10. பனிமலர் மெடிக்கல் காலேஜ் ஹாஸ்பிடல் - பூந்தமல்லி

11. சவிதா மெடிக்கல் காலேஜ் & ஹாஸ்பிடல் - தண்டலம்

12. ஸ்ரீ சத்யா சாய் மெடிக்கல் காலேஜ் & ரிசர்ச் இன்ஸ்டிடியூட் - அம்மாப்பேட்டை

13. ஸ்ரீ பாலாஜி மெடிக்கல் காலேஜ் ஹாஸ்பிடல் - குரோம்பேட்டை

14. ஸ்ரீ முத்துக்குமரன் மெடிக்கல் காலேஜ் ஹாஸ்பிடல் - மாங்காடு

15. எஸ்.ஆர்.எம். மெடிக்கல் காலேஜ் ஹாஸ்பிடல் & ரிசர்ச் செண்டர் - காட்டாங்குளத்தூர்

16. தாகூர் மெடிக்கல் காலேஜ் & ஹாஸ்பிடல் - ரத்தினமங்கலம்.



கன்னியாகுமரி:

17. ஸ்ரீ மூகாம்பிகா இன்ஸ்டிடியூட் ஆஃப் மெடிக்கால் சயின்ஸ் - குலசேகரம்

மதுரை:

18. வேலம்மாள் மெடிக்கல் காலேஜ் ஹாஸ்பிடல் & ரிசர்ச் இன்ஸ்டிடியூட் - அனுப்பநாடி

பெரம்பலூர்:

19. தனலட்சுமி ஸ்ரீநிவாசன் மெடிக்கல் காலேஜ் & ஹாஸ்பிட்டல் - சிறுவாச்சூர்

சேலம்:

20. அன்னபூரணா மெடிக்கல் காலேஜ்  ஹாஸ்பிடல் - கொம்பாடிபட்டி

21. விநாயகா மிஷன்ஸ் கிருபானந்தா வாரியார் மெடிக்கல் காலேஜ் & ஹாஸ்பிடல் - சீரகப்பாடி

திருவள்ளூர்:

22. ஏசிஎஸ் மெடிக்கல் காலேஜ் & ஹாஸ்பிடல் - வேலப்பன்சாவடி

23. ஸ்ரீ ராமச்சந்திரா மெடிக்கல் காலேஜ் & ரிசர்ச் இன்ஸ்டிடியூட் - போரூர்

திருச்சி:

24. எஸ்.ஆர்.எம் மெடிக்கல் காலேஜ் ஹாஸ்பிடல் & ரிசர்ச் செண்டர் - இருங்களூர்

வேலூர்: 

25. கிறிஸ்டியன் மெடிக்கல் காலேஜ் ஹாஸ்பிடல் - வேலூர்.